73வது நினைவு தினம்: மகாத்மா காந்திக்கு தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் 73வது நினைவு தினம், நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டுது. இதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் சார்பில் மகாத்மாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். இந்த நாளை தியாகிகள் தினமாக மாற்றிச் சென்றிருக்கிறார். நாம் அவர் பின்பற்றிய அமைதி, அகிம்சை, எளிமை, பரிசுத்தம், அடக்கம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மகாத்மாவின் கொள்கைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாக அமைந்திருக்கிறது. இந்த தியாகிகள் தினத்தில், நாடு சுதந்திரம் பெறுவதற்காக தீரமிக்க தியாகத்தைச் செய்த அனைவரையும் ஒவ்வொரு இந்தியரும் நினைவுகூர வேண்டும்,’ என்ற கூறியுள்ளார்.

Related Stories: