ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும்

சென்னை: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் முழுமையான, முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களை விரைவில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பேருந்துகள், பயணிகள் ரயில்கள், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று 500க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்களும் 80க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது. எனினும் வழக்கமான எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களின் சேவை இன்னும் தொடங்கவில்லை. இதனால் அவசரத்துக்கு ரயிலில் செல்லும் பயணிகள் மற்றும் மாதாந்திர பாஸ் வைத்துள்ள பயணிகள் ரயில்களை பயன்படுத்த முடியவில்லை.

தற்போது அனைத்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து பயணிகள் கூறுகையில்: சிறப்பு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் இல்லாததால் டிக்ெகட் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது ரூ.150க்குள் இருக்கும் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்வதால் கூடுதலாக ரூ.250-500க்கு டிக்ெகட் முன்பதிவு செய்து போக வேண்டியுள்ளது. பேருந்துகளில் டிக்கெட் அதிகமாக இருப்பதால் தான் ஏழை எளிய மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். எனவே விரைவில் முன்பதிவில்லாத ரயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: