51 நாளாக போராடி வந்த மாணவர்களுக்கு வெற்றி: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக சுகாதாரத்துறையின் கீழ் மாற்றம் செய்து அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் கீழ் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் அதனுடைய கட்டணம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் அதனுடைய கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 ஆயிரத்து 170 ரூபாய் என்ற கட்டணமும், அதேபோல பல்மருத்துவ கல்லூரிகளில் 11,170 ரூபாய் என்ற கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா கல்லூரியானது தமிழக அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு சில ஆண்டுகள் ஆன பின்பும் தற்போது வரை அதனுடைய நிர்வாகம் முழுமையாக தமிழக அரசின் வசம் இருக்கிறது. அதில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தமிழக அரசு சம்பளம் கொடுத்து வந்தாலும் கூட அதனுடைய கட்டணமானது தனியார் கல்லூரிகளுக்கு இணையாக பெறப்பட்டு வந்தது. தொடர்ச்சியாக இதை அனைத்து கட்சிகள் தரப்பிலும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருக்கூடிய மாணவர்களின் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட புகாரை அடுத்து, கடந்த 51 நாளாக நடைபெற்ற தொடர் போராட்டத்தை அடுத்து தமிழக அரசு அதை சுகாதாரத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள 113.21 ஏக்கர் நிலம், மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புகளும் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: