மாநகர செய்தி துளிகள்.

* பச்சை குத்தும் கருவியுடன் இளம்பெண் மாயம்: அயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் மனோஜ்(22). வீட்டிலேயே பச்சை குத்தும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் 20 வயது இளம்பெண் மனோஜ் வீட்டிற்குள் புகுந்து பச்சை குத்த பயன்படுத்தப்படும் 30,000 மதிப்புள்ள கருவியை திருடி தப்பினார்.

* செல்போன் கடையில் கொள்ளை: தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(34). அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று காலை கடையின் முன்பக்க ெஷட்டர் பூட்டை உடைத்து விலையுயர்ந்த 3 செல்போன்கள் மற்றும் 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

* கஞ்சா விற்றவர்கள் கைது: கீழ்கட்டளை அன்புநகர் கல்லுக்குட்டை  பகுதியில்  கஞ்சா விற்ற மூவரசம்பட்டு கிருஷ்ணாநகரை சேர்ந்த ராமச்சந்திரன்(28), தி.நகரை சேர்ந்த கவுதமை(23) மடிப்பாக்கம் போலீசார் கைது செய்து 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இருவர் மீதும் கொலை, அடிதடி, கஞ்சா விற்றது,  வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

* இளம்பெண் தற்கொலை: சித்தாலப்பாக்கம் டிஎன்எச்பி காலனியை சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஹேமாவதி(31) தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹேமாவதி நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்ெகாலை ெசய்துகொண்டார். புகாரின்பேரில் சேலையூர் போலீசார் விசாரித்தபோது, குழந்தை இல்லாததால் முதல் கணவனை விவாகரத்து செய்து கார்த்திகை 2வது திருமணம் செய்தது தெரியவந்தது.

Related Stories:

>