செங்கல்பட்டில் குடியரசு தின விழா 52 லட்சத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 72வது குடியரசு தின விழா நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கலெக்டர் அ.ஜான் லூயிஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பை  மரியாதையை ஏற்றுக் கொண்டார். இவ்விழாவில் 600 பேருக்கு, 53 லட்சம் மதிப்பீட்டில்  அரசு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும்  பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.  1 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து, இதுவரை 13 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளதால், பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கர் விருது- 2021க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தி சிங்கை(7) கௌரவிக்கும் வகையில், நினைவுப்பரிசு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, 50 திருநங்கைகள் உள்பட 85 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாலை விபத்து நிவாரணமாக, 13 பயனாளிகளுக்கு 13 லட்சம் சமூக நல பாதுகாப்பு உதவித்தொகை பயனாளிகளுக்கு 3 லட்சத்து 77 ஆயிரம் என மொத்தம் 418 பேருக்கு 23 லட்சத்துக்கு 82 ஆயிரத்து 500-ம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, இரண்டு பயனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வண்டி மற்றும் ₹1 லட்சத்து 27 ஆயிரத்து 990-ம், வேளாண்மைத்துறை சார்பாக, 7 பயனாளிகளுக்கு, எண்ணெய் பிழியும் இயந்திரம், சூரிய சக்தி மோட்டர், கழல் கலப்பை மற்றும் இதர விவசாய உபகரணங்கள் உட்பட 5 லட்சத்து 36 ஆயிரத்து 358-ம் தோட்டக்கலைத்துறை சார்பாக, ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ், 6 பயனாளிகளுக்கு 34 ஆயிரத்து 260-ம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக, 4 பேருக்கு பசுமை வீடுகள், 11 லட்சத்து 50 ஆயிரத்து 080-ம், வழங்கினார்.

மகளிர் திட்டத்தின் கீழ், அம்மா இருசக்கர வாகனத்திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கான வங்கி கடன் வழங்குதல் மூலம் 3 பேருக்கு 10லட்சத்து  50 ஆயிரம், மாவட்ட உணவு வழங்கல் அலுவலகம் சார்பாக, 160 நபர்களுக்கு குடும்ப அட்டையும் வழங்கினார். 600 பயனாளிகளுக்கு 52லட்சத்து 81 ஆயிரத்து 188 மதிப்பீட்டில், அரசு நலத்திட்ட உதவிகளையும் அ.ஜான் லூயிஸ் வழங்கினார். இம்மாவட்டத்தில், சிறந்த சமூக சேவை புரிந்த செஞ்சிலுவை இயக்கத்தைச் சார்ந்த 10 பேர்,  16 சமூக சேவகர்கள் உட்பட, 54 ஆண்டு காலமாக, சுற்றுலா வழிகாட்டியாக சிறப்பாக சேவை புரிந்த சீனிவாசன்  ஆகியோருக்கு சான்றிதழ்கள் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆதார்ஸ் பச்சேரா, சுந்தரவதனம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வம், ரவிச்சந்திரன், செல்வி, லட்சுமி பிரியா, சமூக நலத்துறை அலுவலர் சங்கீதா முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>