திருப்போரூர் ஒன்றியத்தில் குடியரசு தின விழா 50 ஊராட்சிகளில் செயலர்கள் கொடியேற்றம்

திருப்போரூர்:  திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செயல் அலுவலர் சதீஷ்குமார் தேசியக் கொடியேற்றினார். திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரஞ்சனி ஆகியோர் கொடியேற்றினர்.  திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் குகானந்தம், கணேசன், தலைமை ஆசிரியர் அசோகன், உதவி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்போரூர் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமையாசிரியை மேரி ஸ்டெல்லா கொடியேற்றினார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகங்களில் தேர்தல் நடத்தப்படாததால் ஊராட்சி செயலர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நிர்வாகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 50 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி செயலர்கள் தேசியக் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories:

>