‘இ-ஆபீஸ்’ முறையை பின்பற்ற வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக மின்வாரிய தலைமையகத்தில் இருந்து அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘மின்வாரியத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் ‘இ-ஆபீஸ்’ முறை தொடங்கப்பட்டது. ‘இ-ஆபீஸ்’ முறை ஒரு குறுகிய காலத்திற்குள் 12,000 எண்ணிக்கையிலான பைல்களை தாண்டிவிட்டது. மேலும் காகித முறையை ஒப்பிடும்போது நேரமும் குறைவு. அதிகாரிகளின் குறுகிய அறிவிப்பில் இந்த அமைப்பை கற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சி பாராட்டுக்குறியதாகும். இருப்பினும், சில அலுவலகங்களில் கோப்புகள் ‘இ-ஆபீஸ்’க்கு பதிலாக காகித முறையிலேயே செயலாக்கப்படுகிறது என்பதும் கவனிக்கப்படுகிறது.  எனவே ‘இ-ஆபீஸ்’ முறையை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும்.  கோப்பு முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதற்கும், செலவுகளை தவிர்ப்பதற்கும் ‘இ-ஆபீஸ்’ முறை உதவும். இம்முறையில் விரைவில் முழுமையாக அனைத்து அலுவலகத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது.

Related Stories: