போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 30ம் தேதி உண்ணாவிரதம்

சென்னை: போக்குவரத்துக்கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்கி ஒப்பந்தத்தை இறுதிபடுத்தவேண்டும். பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினோம். நமது கோரிக்கையை செயலாளரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இரண்டுவார காலத்திற்கு மேலாகியும் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை அரசும், நிர்வாகங்களும் துவக்கவில்லை.

எனவே உடனடியாக பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்த வலியுறுத்தி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட கருப்புநாளாகிய ஜனவரி 30ம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதென கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அன்றையதினம் அனைத்து பணிமனைகளிலும் உண்ணாவிர போராட்டத்தை நடத்தவேண்டும். பல்லவன் இல்லம் முன்பு நடைபெறும். நமது போராட்டத்திற்கு பின்னும் பேச்சுவார்த்தை துவங்காவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் தயாராக வேண்டும்.

Related Stories:

>