9ம் வகுப்புக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு

சென்னை: 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை, கல்வியியல் நிறுவனம் வெளியிட்டது. இதன்படி தமிழ்ப்பாடத்தில் 9 இயல்களில் 23 பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் பாடத்தில் 7 யூனிட்டுகளில் செய்யுள், உரைநடை, இலக்கணப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்தில், அலகு 24 வரை உள்ள பாடப் பகுதிகளில் குறைந்த 6 பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. செய்முறையில் வெர்னியர் அளவி, திருகு அளவி, திரவங்களின் கன அளவு அளவிடல் ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியலில் 11 அலகுகள் புவியியல் பாடத்தில் 8 அலகுகள், குடிமையில் பகுதியில் 6 அலகு நீக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>