குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: கடன் பிரச்னையால் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உயிர் பிழைத்த பிளம்பர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை திருவிக நகர் அடுத்த வெற்றி நகர், ராமசாமி தெருவை சேர்ந்தவர் பழனி (46), பிளம்பர். இவர், நேற்று காலை படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சண்முகம், திருவிக நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழனி கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பழனிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் இருந்தாக கூறப்படுகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதி பழனி அவரது மனைவி பவானி (40), மகள் தேவதர்ஷினி (17), மகன் பிரகதீஷ் (11) ஆகிய 4 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில், பழனி மட்டும் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். மற்ற மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குடும்பத்தினர் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பழனி, திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன், தந்தை சண்முகத்தை பார்க்க சொந்த வீட்டிற்கு வந்த பழனி, நேற்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories:

>