மாமூல் தராத பெண்ணுக்கு மிரட்டல்

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரபாகரன். மனைவி இந்திராணி (45). இவர், வியாசர்பாடி 49வது பிளாக்கில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்றிரவு ரவுடி ஆராய்ச்சி (எ) சதீஷ் (32) என்பவர் வந்துள்ளார். கடையில் இருந்த இந்திராணியை மிரட்டி மாமூல் கேட்டுள்ளார். தர மறுத்ததால் கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து, இந்திராணியை தகாத வார்த்தைகளால் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவுடி சதீஷை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இந்திராணியின் கணவரிடம் மாமூல் கேட்டு ரவடி சதீஷ் மிரட்டியுள்ளார். அவர் தர மறுக்கவே, அவரை கத்தியால் வெட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>