இலங்கையில் 4 தமிழக மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.: நாளை காலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்

யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் 4 மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர். தமிழக மீனவர்களை கைது செய்வதற்காக தங்களது கடற்படை ரோந்துப் படகில் துரத்தியபோது மீனவர்களின் படகில் கடுமையாக மோதியதில் படகு மூழ்கி நான்கு மீனவர்களும் நடுக்கடலில் மாயமாகினர். அதனை அடுத்து 4 பேரின் உடல்களையும் இலங்கை கடற்படை மீட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி தந்ததை அடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்றுவருகிறது. மேலும் பிரேத பரிசோதனை முடிந்த பின் இரவு 8 மணிக்கு 4 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.  

அதனையடுத்து நாளை காலை இந்திய கடலோர காவல்படையிடம் மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் உடல்கள் இந்தியாவிலேயே உடற்கூராய்வு செய்யப்படும் என இலங்கை அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: