தேர்தல் பிரசாரம் செய்ய 3 நாள் பயணமாக ராகுல் காந்தி தமிழகம் வருகை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

சென்னை: சட்டமன்ற தேர்தல் வருவதை அடுத்து ராகுல் காந்தி 3 நாட்கள் தமிழகத்தில் மெகா ரோடு ஷோவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார்.

அதன் பிறகு 11.35 மணி அளவில் சிறு, குறு தொழில் முனைவோர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அன்று இரவு திருப்பூரில் தங்குகிறார். 24ம் தேதி நெசவாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் அன்று மாலை தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து 25ம் தேதி கரூரில் விவசாயிகளை சந்திக்கிறார். பின்னர் அனைத்து நிகழ்ச்சியை முடித்து கொண்டு மதுரையில் இருந்து இரவு 8.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>