ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் பலி: 73 பேர் காயம்

ஈராக்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று ஒரு பரபரப்பான மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.  73 பேர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தின்  மத்திய பாக்தாத்தில் உள்ள பாப் அல்-ஷர்கி மார்க்கெட் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள்  நடத்திய இரட்டை   தற்கொலைப்படை வெடிகுண்டு  தாக்குதலில்  28 பேர் கொல்லப்பட்டனர்.  73 பேர் காயமடைந்தனர்,  காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருப்பதாக மருத்துவமனை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கின் சுகாதார அமைச்சகம் தலைநகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க  உத்தரவிட்டு உள்ளது. இந்த  தாக்குதலுக்கு எந்த குழுவும்  இதுவரை  பொறுப்பேற்கவில்லை, ஆனால் ஈராக்கில் சமீபத்தில் ஐ எஸ் குழு மற்றும் போராளி குழுக்கள் பல தாக்குதல்களை நடத்தி உள்ளது. ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி ஜூலை மாதம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆரம்ப கட்ட  தேர்தல்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

Related Stories: