ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்.

அமராவதி: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். 13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று ரேஷன்பொருள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.830 கோடியில் 9,260 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: