காரைக்குடியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: 15 நாளில் சாலை அமைப்பதாக அதிகாரிகள் உறுதி

காரைக்குடி: காரைக்குடி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க  112 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் 4 ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது. பணிகள் முடிந்த சில பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலை இல்லாததால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். முக்கிய சாலையான செக் காலை, செஞ்சை சாலை, வவு சி சாலை என அனைத்து சாலைகளும் பயன்படுத்த முடியாமல் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் படுகுழிகளாக உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர், மாநில இலக்கிய அணி செயலாளர் தென்னவன் தலைமையில் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடந்தது.

5 விளக்கு முதல் அண்ணா சிலை வரை 1 கி.லோ மீட்டருக்கு 500க்கும் மேற்பட்ட தி.மு.க வினர் சாலை யில் படுத்து உருண்டனர். பின்னர் அண்ணா சிலையில் மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி அருண், நகராட்சி உதவி பொறியாளர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாளில் சாலை அமைப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் இந்த போராட்டம் நடந்தது.

Related Stories: