வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்: பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.!!!

மதுரை: பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 15 நிமிடங்கள் சமஸ்கிருத வாராந்திர செய்தி தொகுப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட பொதிகை டிவியில் இதுவரை வேறு மொழி செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை. அப்படியிருக்கும் போது தமிழர்களின் பன்பாட்டு வாழ்விற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தி அறிக்க வாசிப்பதை ஏற்க முடியாது. எனவே சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித் தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, மதுரை கிளை நிர்வாக நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனு தாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம். வேறு சேனலையும் மாற்றிக் கொள்ளலாம், இதனைவிட முக்கிய பிரச்சனைகள் பல உள்ளன. தேவையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து மனுதாரர் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>