நாம் எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: கோபி , யூ-டியூப் பிரபலம்

யூ-டியூப் போன்ற சமூக வளைதளங்கள் மூலமாக விரைவில் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செய்வதே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். நாம் எடுக்கும் விஷயங்கள் சரியாக இருந்தாலே போதும் பிரபலம் ஆகிவிடலாம். இதுபோன்று ஆபாசமாக பேட்டி எடுத்து அதை பதிவேற்றம் செய்யும் யூ-டியூப் நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட எல்லை எது என்று தெரியவில்லை. நாம் இதற்குள் தான் இருக்க வேண்டும். இந்த எல்லையை தாண்டிவிடக்கூடாது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சமூக வளைதளங்களுக்கு சென்சார் போர்டு போன்றவைகள் இல்லாதது இன்னும் வசதியாகிவிடுகிறது. இதனால், மிகவும் எளிதாக யாரை பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்று அதை செய்கிறார்கள். சமூக வளைதளம் பற்றி சரியான புரிதல் இல்லாததே இதற்கு காரணம்.

ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு 4 வீடியோக்களை போட்டுவிட்டால் நம் பக்கம் அனைவரும் திரும்பி விடுவார்கள் என்று நினைப்பது தவறு. நம் கையில் ஒரு போன் இருந்தாலே எதை வேண்டுமானலும் எடுத்து அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்துவிடலாம் என்பதால், அதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை. இதற்கு சென்சார் போர்டு போன்று தணிக்கை அமைப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், ஒரு வீடியோவை நாம் யூ-டியூப் நிர்வாகத்துக்கு ரிப்போர்ட் செய்யும்போது அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்பார்கள்.

யூ-டியூப் போன்ற சமூக வளைதளங்களில் குறிப்பிட்ட யூ-டியூப் சேனல் நிர்வாகத்தினர் காசு கொடுத்து பேச சொல்கிறார்கள் என்றால், அதற்கேற்றார் போல் பேசுவதும் தவறு தான். என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் என்று அறிந்து தெரிந்து பேச வேண்டும். பேட்டி கொடுப்பவர்களும் கேமரா இருப்பதை மறந்து சில நேரம் அந்தரங்கமான விஷயங்களை பேசிவிடுகின்றனர். இதனால், மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நாங்கள் சேனல் ஆரம்பிக்கும்போது எதுவுமே தெரியாமல் புதுவிதமான விஷயங்களை கையில் எடுத்து அதை பேசினோம்.

நாங்களும் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று புதுவிதமான விஷயங்களை கையில் எடுத்தோம். அதன் பின்னர் ஒரு இடத்திற்கு வந்த பிறகு அதை நாங்கள் மாற்றிக்கொண்டு எங்களின் இலக்கை நோக்கி பயணித்தோம். மேலும், யூ-டியூப் வீடியோக்களை குழந்தைகளிடம் பெற்றோர் கொடுக்கும் போது அதில் உள்ள பிரைவசியை மாற்ற வேண்டும். பொதுவான வீடியோக்களை எடுத்துவிட்டு குழந்தைகளுக்கான வீடியோக்கள் வரும் வகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்த புரிதல் பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருப்பதில்லை. இதனாலேயே, யூ-டியூபில் ஆபாச வார்த்தைகள் அடங்கிய வீடியோக்கள் வரும் போது அதை குழந்தைகளும் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது சமூகத்தில் சமூக வளைதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அதை பயன்படுத்துபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நல்ல விஷயங்களை பதிவிட்டும், அதை பார்க்கவும் வேண்டும். இனி யூ-டியூப் சேனல்களை ஆரம்பிக்கும் இளம் தலைமுறையினர் இதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். மேலும், நமது நாட்டிற்கு எது சரியாக இருக்குமோ அதற்கான

சட்டங்களை அரசு இயற்றலாம். நம் கையில் ஒரு போன் இருந்தாலே எதை வேண்டுமானலும் எடுத்து அதை யூ-டியூபில் பதிவேற்றம் செய்துவிடலாம் என்பதால், அதற்கு எந்த ஒரு வரையறையும் இல்லை. இதற்கு சென்சார் போர்டு போன்று தணிக்கை அமைப்பை ஏற்படுத்தி கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், ஒரு வீடியோவை நாம் யூ-டியூப் நிர்வாகத்துக்கு ரிப்போர்ட் செய்யும்போது அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்பார்கள்.’’

* பொதுமக்கள் இதுபோன்ற யூடியூப் சேனல்களை ஆதரிக்கக்கூடாது: சித்தண்ணன், ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆணையர்

அறிவியலின் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் அபரிமிதமானது. ஸ்மார்ட் போன் எப்போது வந்ததோ அப்போதே உலகம் கைக்குள் வந்துவிட்டது. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை ஒரே நிமிடத்தில் உலகம் முழுவதும் யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்கள் மூலமாக கொண்டு செல்லலாம். இந்த விஞ்ஞான வளர்ச்சியை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அகோரமான படமோ, பெயரோ, ஆபாச படங்களோ வரக்கூடாது என்ற நிபந்தனைகளை சமூக வளைதள நிர்வாகம் கொடுத்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறி பதிவிடுபவர்களின் கருத்துக்கள், படங்களை குறிப்பிட்ட சமூக வளைதள நிர்வாகமே நீக்கிவிடும்.

பின்னர், அவர் தன்னுடைய ஐடி மூலம் மீண்டும் ஒரு சேனலை ஆரம்பிக்க முடியாது. ஆனால், வேறு ஐடி மூலம் சேனல் ஆரம்பித்துகொள்ளலாம். இதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாகவே உள்ளது. இந்தியாவில் பிராங்க் ஷோ செய்து அல்லது ஆபாச கேள்விகளை கேட்டு வீடியோ பதிவிடும் போது நமது கலாச்சாரத்திற்கு ஏற்றதாக அது இருப்பது இல்லை. இதை எப்படி முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கென தனியாக ஒரு சிறப்பு குழுவையும் அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

கூடிய விரைவில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றால் கூட மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையே வரப்போகிறது. இந்த சூழலில் வந்தால் தான் ஆபாச சித்தரிப்பு, பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் இல்லாமல் இருக்கும். குறிப்பிட்ட இதுபோன்ற சில யூடியூப் சேனல்கள் நாங்களே பணம் கொடுத்து தான் வீடியோ எடுக்கிறோம் என்று கூறுகிறார்கள். பொதுமக்கள் இதை ரசிக்கிறார்கள் என்கிறார்கள். சிலர் ரசிக்கிறார்கள் என்பதற்காக பெண்மையை இழிவு படுத்துவம் வகையில் செயல்பட்டால் அது குற்றம் தான். இதுபோன்ற செயல்பட்ட ஒரு யூடியூப் சேனல் நிர்வாகிகளை கைது செய்தது சரியான ஒரு நடவடிக்கை.

சேனல் பெரிய அளவில் வளரும், நாமும் வளருவோம், பணம் சம்பாதிக்கலாம், விரைவில் மக்களிடம் பெரிய ஆளாக ஆகிவிடுவோம் என்பதற்காக சிலர் இவ்வாறு வீடியோக்களை பதிவிடுகிறார்கள். இது தவறான ஒரு போக்கு. எனவே, தான் மத்திய அரசு இதை தடுக்க கடுமையான சட்டத்தை விரைவில் இயற்ற உள்ளது. பொதுமக்களும் இதுபோன்ற யூடியூப் சேனல்களை ஆதரிக்கக்கூடாது. இளம் தலைமுறையினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளிடம் ஸ்மார்ட் போன் கொடுப்பதும் தவறான ஒன்று. விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

யார் இதற்கு சூத்திரதாரியாக இருக்கிறார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். யூடியூப் சேனலை எப்படி முழுவதுமாக கட்டுப்படுத்த  வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்கென தனியாக ஒரு சிறப்பு குழுவையும் அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. கூடிய  விரைவில் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றால் கூட மத்திய  அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையே வரப்போகிறது. இந்த சூழலில் வந்தால் தான் ஆபாச சித்தரிப்பு, பெண்களை இழிவுபடுத்தும் பதிவுகள் இல்லாமல்  இருக்கும். ’’

Related Stories: