குடியரசு தின சிறப்பு சலுகை: ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவிப்பு

சென்னை: குடியரசு தின சிறப்பு சலுகை திட்டத்தை ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு தின ‘டிஜிட்டல் இந்தியா விற்பனை’ என்ற புதிய சலுகை திட்டத்தின்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை சலுகை விலையில் பெறலாம். இதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் எலக்ட்ரானிக் பொருட்களை ரூ.1,000 செலுத்தி இன்று (18ம் தேதி) முதல் 20ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் டிஜிட்டல் இந்தியா விற்பனையில், உடனடி தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளாக கூடுதலாக ரூ.1,000 சலுகை பெறலாம்.

இதேபோல் ரூ.2,000 செலுத்தி முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இஎம்ஐ மீது கூடுதலாக ரூ.2,000 உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். முன்பதிவு பலன்கள் உட்பட மேற்கண்ட சலுகைகள் டிஜிட்டல் இந்தியா விற்பனை நடைபெறும் 22ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை உண்டு. முன்பதிவு உட்பட அனைத்து சலுகைகளையும் ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் www.reliancedigital.in இணையதளத்தில் ஆன்லைனிலும்  பெற்றுக் கொள்ளலாம் என ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.

Related Stories: