ராணுவ சுகாதார பணியாளருக்கும் தடுப்பூசி போடப்பட்டது

சென்னை:  தமிழகத்தில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதேநேரத்தில் ராணுவத்தில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.  இதற்காக இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய தலைமையகமான சென்னையின் கீழ் வெலிங்டன், ஆவடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கெரோனா தடுப்பூசி போடப்பட்டது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 1500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கோவின் செயலியில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வரும் நாட்களில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று ராணுவ மக்கள் தொடர்பு அமைச்சகம் ெதரிவித்துள்ளது.

Related Stories: