கொரோனா தடுப்பூசி போட 72 ஆயிரம் பேர் பதிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்புற சமுதாய சுகாதார நல மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திடடத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு வட்டார துறை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாநகர நல அலுவலர் ஜெகதசீன், மாநகர மருத்துவ அலுவலர் ேஹமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சியை பொறுத்தவரையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 72 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் 10 முதல் 15 ஆயிரம் பேர் கூடுதலாக பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவர்களுக்கும் அனைத்து விதமான சுகாதாரப் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், துப்புரவு ஆய்வாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக வயது முதிர்ந்த 50 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. சென்னை முழுவதும் 16 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  தடுப்பூசி செலுத்துவதற்காக COWIN என்ற மத்திய அரசின் இணையதளத்தின் வாயிலாக பதிவுசெய்யப்பட்டு அதற்குப்பின் தடுப்பூசி போடுவதற்காக பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சி  சார்பில் 66,370 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: