கொரோனா தொற்றுக்கு இடையிலும் ஓராண்டில் 50 லட்சம் புறநோயாளிகளுக்கு சிகிச்சை: மாநகராட்சி சுகாதார மையம் சாதனை

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் சென்னையில் உள்ள பல தனியார் மருத்துவமனையில் பொதுமருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றனர். சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி, இருமல், வலிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு சென்னையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் 50 லட்சத்து 18 ஆயிரத்து 136 பேர் பயன் பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் மொத்தம் 140 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. இவற்றின் மூலம்,  ஜனவரியில் 5.41 லட்சம் பேரும், பிப்ரவரியில் 5.42 லட்சம் பேரும், மார்ச்சில் 5 லட்சம் பேரும், ஏப்ரல் மாதத்தில் 3.36 லட்சம் பேரும், மே மாதத்தில் 3.22 லட்சம் பேரும், ஜுனில் 3.62 லட்சம் பேரும், ஜூலையில்  3.91 லட்சம் பேரும், ஆகஸ்ட்டில் 4 லட்சம் பேரும், செப்டம்பரில் 4 லட்சம் பேரும், அக்டோபரில் 4 லட்சம் பேரும், நவம்பரில் 3.96 லட்சம் பேரும், டிசம்பரில் 4.15 லட்சம் பேர் என்று மொத்தம் 50 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

Related Stories: