27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்

சென்னை: கார் வாங்க கூடியவர்கள் ஜனவரி 2021ல் எதிர்கொள்ளும் விலை உயர்வை வெற்றி கொள்ள, மாருதி சுசூகி விலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. ஊரடங்கு கால கட்டத்திற்கு பின், சந்தைகள் புத்துயிர் பெற்று வருகின்றன. பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஊரடங்கு முடிந்திருந்தாலும் கூட, மக்களுக்கு இன்னமும் சந்தேகம் நிலவுவதால், பொதுப் போக்குவரத்தைக் காட்டிலும் தங்களின் சொந்த வாகனங்களில் செல்வதையே பெரும்பாலும் விரும்புகின்றனர். இதனால், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சிறப்புத் திட்டம், மாருதி சுசூகி ஷோ ரூமில் உள்ள பல்வேறு பயணிகள் கார்களின் வரம்பில் சிறப்பு தள்ளுபடியுடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. இந்த சிறப்பு சலுகை கார்களின் மாடல்களை பொருத்து 27,000 முதல் 44,000 வரை வேறுபடுகிறது. இந்த விலை பாதுகாப்பு திட்டம் இன்றுடன், 17 ஜனவரி 2021 அன்று நிறைவடைகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாருதி ஷோ ரூம் கடைகளிலும் கிடைக்கிறது.

Related Stories:

>