திருவள்ளுவர் தின விழா: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு: மறைமலைநகரில், திருவள்ளுவர் மன்றம் சார்பில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டது. இதில், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைமலைநகர் நகர திருவள்ளுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது.  திருவள்ளுவர் மன்ற நிர்வாகி குமரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சமத்துவமணி, டிக்காரம், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, திருவள்ளுவர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில், பள்ளி மாணவி சகானா சிலம்பம் விளையாட்டை ஆடினார்.

மன்ற நிர்வாகிகள் மீனாட்சி வெங்கடாசலம், சிவஞானபாண்டியன், திமுக நிர்வாகிகள் நித்யானந்தன், பழனி, ரவி, சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது. இதில் திருவள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரவை தலைவர் விஸ்வநாதன், துணைத் தலைவர் தனஞ்செழியன், செயலாளர் சம்பத்குமார், இணைச் செயலாளர் குமார், செயற்குழு உறுப்பினர்கள் சிவராமன், சண்முகம், மோகனஜோதி உள்பட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் திருக்குறள் பெருமை பற்றி பலரும் பேசி குழந்தைகளுக்கு திருக்குறள் விளக்கவுரை புத்தகம் வழங்கப்பட்டது.

Related Stories:

>