மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு: ஆசாமிக்கு வலை

குன்றத்தூர்: தாம்பரத்தில் இருந்து பழந்தண்டலம் நோக்கி மாநகர பஸ் நேற்று மதியம் புறப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் அருகே சென்றபோது, திடீரென குறுக்கே வந்த ஒரு ஆசாமி, டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சாலையோரம் கிடந்த பெரிய கல்லை எடுத்து, பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே அந்த ஆசாமி அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். பஸ் கண்ணாடியை ஆசாமி உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரை, வலைவீசி ேதடி வருகின்றனர்.

Related Stories:

>