பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில்1,364 கோடி மோசடி: தவாக தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை: பிரதமரின் கிசான் சம்மான் விவசாயத் திட்டத்தின் மூலம் இரு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில், தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத் தகவலில் அம்பலமாகி உள்ளது. தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துவோர்.  மீதமுள்ள 44.41 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள் ஆவர்.  கடந்த ஜூலை 31ம் தேதி வரை வருமான வரி செலுத்திய  பணக்காரர்களுக்கும் சேர்த்து விவசாயிகள் போர்வையில் சேர்த்து 1,364.13 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மோசடி அதிகம் நடைபெற்ற  மாநிலங்களில் பஞ்சாப் முதல் இடத்தில் உள்ளது.அடுத்ததாக,  மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் மோசடி நடந்துள்ளது.

Related Stories: