இசிஐ சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு

சென்னை: இந்திய சுவிசேஷ திருச்சபை சென்னை பேராயத்தின் முதல் பெண் பேராயராக கதிரொளி மாணிக்கம் தேர்வு செய்யப்பட்டு, திருநிலைப்படுத்தல் ஆராதனை வானகரம் இயேசு அழைக்கிறார் அரங்கத்தில் நடந்தது. இந்தியாவின் 3வது பெண் பேராயராகவும், தமிழகத்தின் முதல் பெண் பேராயராகவும் பொறுப்பேற்றுள்ள இவர், சென்னை பெயின் பள்ளியில் தொடக்க கல்வியையும், புனித ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளநிலை கல்வியையும், கிறிஸ்டோபர்ஸ் கல்லூரியில் ஆசிரியர் பட்டய படிப்பும், இறையியல் படிப்பை சென்னை பல்கலை கழகத்திலும், HBI யிலும் பயின்றுள்ளார்.  இவர், இந்திய சுவிசேஷ திருச்சபையின் பேராயர் கமிசரி, இசிஐ உயர்மட்ட குழு உறுப்பினர், இந்திய அளவிலான லீதியாள் பெண்கள் ஐக்கியத்தின் தலைவர், சென்னை இறையியல் கல்லூரியின் பேராசிரியர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியவர்.

இசிஐயின் 13 பேராயர்களில் முதல் துணை பிரதம பேராயராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். இவரது தந்தை இந்திய சுவிசேஷ திருச்சபையின் நிறுவனர் பேராயர் எஸ்றா சற்குணம் ஆவார். பேராயர் கதிரொளி மாணிக்கத்தின் ஆராதனையில், இசிஐ திருச்சபை பேராயர்களும் மற்ற திருச்சபைகளின் பேராயர்களும், திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி நிர்வாக இயக்குனர் சகோ.ஐசக் லிவிங்ஸ்டன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்த போதகர்கள் அனைத்து திருச்சபையின் தலைவர்கள், ஏரியா இயக்குனர்கள், ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டு புதிய பேராயரை வாழ்த்தினர்.

Related Stories: