அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி விரர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு அறிவிப்பு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவனியாபுரம்  ஜல்லிக்கட்டு போட்டியில்முதல் சுற்று முடிந்த நிலையில் 2-வது சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்று வீரர்களுக்கு மஞ்சள் நிற உடை வழங்கப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 430 மாடுபிடி வீரர்களும், 788 காளைகளும் களம் காண இருக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோயில் காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்தன.

Related Stories: