உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் தூத்துக்குடி, மதுரை, திருச்சி கட்டணம் திடீரென உயர்வு: இருக்கைகள் ஹவுஸ்புல்

சென்னை: பொங்கல் பண்டிகை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேற்று காலை 8.35 மணி, 11 மணி, பகல் 1 மணி ஆகிய நேரங்களில் 3 விமானங்கள் சென்றன. இந்த 3 விமானங்களிலும் இருக்கைகள் நேற்று மாலை முன்பதிவு செய்யப்பட்டது. மதுரைக்கு இன்று காலை 6.30 மணி, 8.35 மணி, 9.35 மணி, பகல் 12.15 மணி, மாலை 5.55 மணி ஆகிய நேரங்களில் 5 விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்த விமானங்களிலும் முன்பதிவு நேற்றே முடிந்துவிட்டது.

திருச்சிக்கு காலை 7 மணி, இரவு 8.35 மணிக்கு என 2 விமானங்கள் உள்ளன. அந்த விமானங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. கோவைக்கு 7 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சேலம் செல்லும் விமானத்திலும் குறைத்தளவு டிக்கெட்களே உள்ளன. பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளன. கோவை, சேலம் விமானங்களிலும் கட்டணம் அதிகரித்துள்ளன. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்பதால் கட்டண உயர்வை பொருட்படுத்தாமல் பயணிகள் பயணித்தனர்.

Related Stories: