60 விவசாயிகளின் இறப்புக்கு மத்திய அரசு வெட்கப்படவில்லை: டிராக்டர் பேரணியால் வெட்கப்படுகிறது: ராகுல்காந்தி கண்டனம்..!

டெல்லி: டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருபவர்களில் 60 விவசாயிகள் இறந்தபோது வராதக் கவலை, டிராக்டர் பேரணியால் மத்திய அரசுக்கு வருவதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம்  தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

மேலும், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம்   நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் நடந்து வரும் போராட்டமானது 50வது நாளை நெருங்கி உள்ளது.

இதனையடுத்து,  டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “60 விவசாயிகளின் இறப்புக்கு மத்திய அரசு வெட்கப்படவில்லை. ஆனால் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் மத்திய அரசு வெட்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.   முன்னதாக கடந்த ஜனவரி 7-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.

Related Stories: