காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வரும் நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார்

சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியை பார்வையிட நாளை ராகுல்காந்தி வருகிறார். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில், தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, பெருமை மிக்க விவசாயிகளின் சின்னமான காளையை அடக்குகிற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொள்வதால் காங்கிரசார் உற்சாகத்தில் உள்ளனர்.

காலை 11 மணி முதல் சுமார் 4 மணி நேரம் ராகுல்காந்தி இப்போட்டியை கண்டுகளிக்க உள்ளதால், அவருடன் ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார். அவரும் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். அப்போது ராகுல்காந்தி சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போட்டி நடைபெறும் மைதானத்தில் இருப்பதால்  அவரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: