வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்ற இடைக்கால தடைக்கு வரவேற்பு தெரிவித்ததோடு, வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை செயல்படுத்த, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்னர்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச்சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தரப்பு நிலை கருத்தில் கொண்டு குழு அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வேளாண் சட்டங்களுக்கு , உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

Related Stories: