சில்லி பாய்ண்ட்...

* கடைசி டெஸ்டில் விளையாடுவதற்காக பிரிஸ்பேன் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், தங்கியுள்ள ஓட்டலில்  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கழிப்பறையை சுத்தம் செய்வது மற்றும் படுக்கையை தயார் செய்வது போன்ற வேலைகளையும் தாங்களே செய்ய வேண்டி இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்மித் (900 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். நியூசிலாந்தின் வில்லியம்சன் (919) முதல் இடத்தில் நீடிக்கும் நிலையில், இந்தியாவின் கோஹ்லி (870) 3வது இடத்துக்கு பின்தங்கினார்.

* தாய்லாந்து ஓபனில் விளையாடுவதற்காக பாங்காக் சென்றுள்ள இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தனக்கு செய்யப்பட்ட பரிசோதனையின்போது மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாக தெரிவித்துள்ளதுடன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுகாதார ஊழியர்களின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

>