வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காமல் அவதி: வாக்காளர்கள் ஏமாற்றம்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் தட்டுப்பாடு காரணமாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 20ம்தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இதற்கிடையே புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்வர்களுக்கு வீடு தேடி வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும். அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்களும், சிதிலமடைந்த வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்களும்  அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டு நகல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்று கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.  

இதற்காக படிவம் 001சிஐ பூர்த்தி செய்து நகல் வாக்காளர் அடையாள அட்டையை 25 செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று ெதரிவிக்கப்பட்டது. இதனால் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் மற்றும் பழைய வாக்காளர்கள் நகல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற இ-சேவை மையங்களுக்கு சென்றால்,  வண்ண வாக்காளர் அடையாள அட்டை காலியாகி விட்டதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பொதுமக்களை திரும்பி அனுப்பி வைக்கின்றனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள இ-சேவை மையங்களில் இந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: வண்ண வாக்காளர் அடையாள அட்டை நகலை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. பி்னனர் இந்த திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம், தாலுகா அலுவலகம் என எங்கு சென்றாலும் அடையாள அட்டை காலி ஆகிவிட்டதாக தெரிவிக்கின்றனர். எப்போது வரும் என்று கேட்டாலும், அது தெரியாது என்று அனுப்பி வைக்கின்றனர். அவசர தேவைக்காக அடையாள அட்டை கிடைப்பது இல்லை. தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டாலும் சரியான பதில் சொல்லுவது இல்லை. பொதுமக்களின் நலன் கருதி கலெக்டர் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: