நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது!: வாட்ஸ் அப் விளக்கம்

டெல்லி: நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சமீபத்தில் அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு மெசேஜ் வந்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே மக்கள் மத்தியில் பல குழப்பங்களை எழுப்பி இருந்தது.

இந்நிலையில் நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி ஃபேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது. வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும். பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம். பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரைவசி பாலிசி அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் முதல் நம்மால் வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்த முடியாது என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தனை தகவல்கள் நம்மிடம் இருந்து பெறப்படுகிறாதா என பலரும் அதிர்ச்சி அடைந்தனர். வாட்ஸ் அப்-ஐ விடுத்து பிற தகவல் பரிமாற்ற செயலிக்கு மக்கள் மாறிய வண்ணம் இருந்த நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் இருந்து இத்தகைய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: