பொங்கல் திருநாளையொட்டி மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு !

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 24 மணி நேரமும் கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக சார்பில் கூடுதல் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை (இன்று)11ம் தேதி முதல் 13ம் தேதி ஆகிய 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் பொங்கல் திருநாளன்று, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிட ஏதுவாக சென்னையிலிருந்து 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில் 11ம் தேதி 2,226 பேருந்துகளும், 12ம் தேதி 4,000 பேருந்துகளும், 13ம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திட வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இன்று முதல் 13ம் தேதி வரை 3 நாட்களுக்கு வெளியூர் செல்லும் பேருந்துகள் பின்வரும் ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

* மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் !

* தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் !

* பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் !

* டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ( கோயம்பேடு) !

* கே.கே.நகர் பேருந்து நிலையம் !

Related Stories: