கோழியை கொன்று முட்டைகளை லாவகமாக விழுங்கிய பாம்பு: வீடியோ வைரலாக பரவல்

கடலூர்: கடலூரில் கோழியை கொன்று முட்டை, எலியை விழுங்கிய பாம்பு அதனை மீண்டும் கக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர் கம்மியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வந்துள்ளார். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக மாயாண்டி தனது வீட்டின் மாடியில் வைக்கோல் போட்டு வைத்துள்ளார். இந்த வைக்கோலில் அவர் வளர்க்கும் கோழி, முட்டை விட்டு அதனை அடைகாத்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வைக்கோலில் பாம்பு இருந்ததை பார்த்த மாயாண்டி பாம்பு பிடிக்கும் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற செல்லா, பாம்பை பிடித்து வெளியே கொண்டு வந்தார். அப்போது பாம்பு அது விழுங்கிய 6 முட்டைகள் மற்றும் ஒரு எலி ஆகியவற்றை தானாக கக்கியுள்ளது. பாம்பு விழுங்கிய 6 முட்டைகளை எந்த சேதாரமும் இன்றி கக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: