திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பு சத்திரம் அதிரடி மீட்பு

சென்னை: திருப்போரூரில் புகழ் பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு திருப்போரூரில் 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள 880 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் திருப்போரூர்  நான்கு மாடவீதிகள் மற்றும் முக்கிய தெருக்களில் 64 சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த சத்திரங்கள் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்போரூர் கோயில் செயல் அலுவலர்சக்திவேல், கோயில் சொத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டார்.     அப்போது, திருப்போரூர் தெற்கு மாடவீதியில் உள்ள சுமார் 4 கிரவுண்ட் மனை மற்றும் சத்திரம், சென்னையில் உள்ள தனியார் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு  கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், உரிய ஆவணங்களை கொண்டு வரவில்லை. இதைத்தொடர்ந்து திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முருகன் மற்றும் ஊழியர்கள் தெற்கு மாடவீதியில் உள்ள சத்திரம் மற்றும் மனையை மீட்டு பாதுகாப்பு வேலி அமைத்து இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட 4 கிரவுண்ட் சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி ரூபாய் இருக்கும்.

Related Stories: