56 பயணிகளில் நிலைமை என்ன?: இந்தோனேசியாவில் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு.!!!

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

ஸ்ரீவிஜய நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியது. விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்ததாக இந்தோனேசியா விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்தது.

தொடர்ந்து, விமானம் தொடர்பை இழந்த ஜகார்த்தா விரிகுடா கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பலில் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்த மீட்புக்குழுவினர் பாகங்களை கண்டுபிடித்த வீடியோவை Breaking Aviation News & Videos என்ற செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: