முன்பதிவு செய்தும் பலனில்லையா? ஆற்றுமணல் பதிவை ரத்து செய்யும் வசதி: மணல் லாரி உரிமையாளர்கள் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் மணல் விற்பனை செய்கிறது. இந்த நிலையில் குறைவான மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுவதால், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டும் தற்போது முன்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் ஒரு சில குவாரிகள் மட்டுமே செயல்படுவதால், மணல் பெற முன்பதிவு செய்த பலருக்கு 30 நாட்களுக்கு மேலாகியும் மணல் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், மணலுக்காக பல நாட்களுக்கு குவாரிகளிலேயே வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், லாரி உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதனால், மணல் லாரி உரிமையாளர்கள் முன்பதிவை ரத்து செய்து பணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று திட்ட இயக்குனரகத்துக்கு கோரிக்ைக வைத்தனர். இதை தொடர்ந்து www.tnsand.gov என்ற இணையதளத்தில் முன்பதிவை ரத்து செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரத்து செய்த 3 நாளில் பணம் திரும்ப பெற முடிகிறது.

Related Stories: