திருச்செந்தூர் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் தங்க வேல் காணிக்கை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த முருக பக்தர் 406 கிராம் எடை கொண்ட தங்க வேல் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மீண்டும் கோயில் உண்டியலில் மாதம் தோறும் சுமார் 2 கோடி ரூபாய் அளவிற்கு காணிக்கையும், தங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்களும் காணிக்கையாக கிடைக்கிறது.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சார்பில் 406 கிராம் எடை கொண்ட தங்க வேல் நேற்று காணிக்கையாக வழங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர்(பொ) கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், நகை சரி பார்க்கும் அதிகாரி சங்கர், உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து மற்றும் தொழில் நுட்பகுழுவினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: