சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வடியாத மழைநீர்.: மழைநீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த ஒரு நாள் மழைக்கே பல இடங்களில் தேங்கிய மழை நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நேற்று இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

சென்னை கலைஞர் கருணாநிதி நகர், ராஜமன்னார் சாலை மற்றும் ஆர்.கே.சண்முகம் சாலை உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல மேற்கு வேளச்சேரியில் பெரியார் நகர், நேதாஜி நகர், ஆதம்பாக்கம் மற்றும் மடுவான்கரை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மக்கள் இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் வடியாமல் உள்ளது. ஒரு நாள் மழைக்கே தேங்கிய உள்ள நீர் வடியாமல் இருப்பது இது புதிதல்ல என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுபோன்று பல ஆண்டுகளாக சிரமத்துக்கு உள்ளவராக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: