பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன. 29-ம் தேதி தொடக்கம்...நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவிப்பு.!!!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அவர் அரசின் கொள்கைகளையும், முக்கிய திட்டங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி, தனது 3வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய மூன்று வார இடைவெளி விடப்படும்.

தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சககுழு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது அனைவரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: