விடாமல் அச்சுறுத்தும் கொரோனா...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 8.6 கோடியாக உயர்வு: 18.59 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,859,521 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 86,060,233 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60,985,805 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,60,75,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,09,88,703 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 18 லட்சத்து 59 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,32,27,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,07,708 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories: