இடியுடன் கூடிய மழைக்கு பின்னர் டெல்லியில் அதிகரித்த அடர் பனிமூட்டம்: பார்வை தூரம் 50 மீட்டராக குறைந்தது

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று மூடுபனியின் தாக்கம் அதிகரித்து நகரம் முழுவதும் பனிபோர்த்தி காணப்பட்டது.  இதனால் குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்சியசாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய காற்றின் வேகம் காரணமாக வடஇந்தியா மட்டுமின்றி தலைநகர் டெல்லியிலும் நேற்று முன்தினம் நகரின் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதன்காரணமாக நேற்று காலை நகரில் பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடர்பனி சூழ்ந்து காணப்பட்டதால் சாலைகள் தௌிவற்று இருந்தது.  பார்வை தூரம் 50 மீட்டராக குறைந்து சப்தார்ஜங் மையத்தில் பதிவானது. பாலம் வானிலை மையத்தில் இது நேற்று காலை 7.30 மணியளவில் 150 மீட்டராக பதிவானது. இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள அளவுகோல்களின்படி, பார்வை தெரிவுநிலை என்பது 0 முதல் 50 மீட்டர் வரை இருக்கும்போது ”மிகவும் அடர்த்தியான” மூடுபனி என குறிப்பிடப்படும். இதுபோன்ற நிலை காணப்பட்டால் பார்வை தெரிவுநிலை 51 முதல் 200 மீட்டர் வரை இருக்கும். ”மிதமான பனிமூட்டம்”எனில், பார்வை தெரிவுநிலை தூரம் என்பது  201 மற்றும் 500 மீட்டராகவும், ”ஷாலோ” என்கிற நிலையில்  501 மற்றும் 1,000 மீட்டராகவும் இருக்கும்.

மேலும், டெல்லியில் நேற்று குறைந்தபட்சவெப்பநிலை 1.4 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது கடந்த 22 நாட்களில் பதிவான மிக உயர்ந்த வெப்பநிலையாகும். ஞாயிற்றுக்கிழமை, வடமேற்கு இந்தியாவை பாதிக்கும் வலுவான மேற்கத்திய காற்றின் தாக்கம் காரணமாக டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. சப்தர்ஜங் ஆய்வகத்தில் பதிவான தரவுகளின்படி, சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணி வரை நகரில் சுமார் 39.9 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகதெரிவித்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய காற்றின் தாக்கத்தால் மலைப்பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவை ஏற்படுத்தி வருகிறது. அது விலகினால் வெப்பநிலை மீண்டும் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் ஐஎம்டி அதிகாரி கூறினார்.

மழை, வேகமான காற்றால் மேம்பாடு அடைந்த காற்று

டெல்லியில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக நகரில் காற்றின் தரம் ”மிதமான”பிரிவுக்கு முன்னேறியது. இது மேலும் முன்னேறி”திருப்தி” நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்றுத்தரக்குறியீடு எண் நேற்று காலை 148 ஆக பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் இது நேற்று முன்தினம் 354 ஆகவும், சனிக்கிழமையன்று 443 ஆகவும் பதிவாகியிருந்தது. மேலும், திங்கள் மற்றும் செவ்வாய் வர காற்றின் தரம் மிதமானது முதல் திருப்தி என்கிற நிலைகளுக்கு இடையில் பதிவாகும் என்று கணித்துள்ளது.

Related Stories: