டெல்லியில் சட்டவிரோத தொழிற்சாலை 4.14 கோடி குட்கா பறிமுதல்: 831.72 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

புதுடெல்லி: மத்திய சரக்கு மற்றும் சேவை வரியின் ஏய்ப்பு தடுப்பு குழுவினர் டெல்லியில் செயல்பட்டு வந்த புகையிலை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த நிறுவனம் உரிய உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்படுவதும் சோதனையின் போது கண்டறியப்பட்டது. தொழிற்சாலையில் டொபாகோஸ் தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக இங்கு சுமார் 65 தொழிலாளர்கள் பணிபுரிவதும் தெரியவந்தது. இங்கு தயாரிக்கப்படும் குட்ாக, பபான்மாசலா உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களுக்கும் சப்ளைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்த தொழில்சாலையில் இருந்தபுகையிலை பொருட்கள்,  அதற்காக மூலப்பொருட்கள் ஆகியவைற்றை ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தடுப்புக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ₹4.14 கோடியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட பொருட்கள்  மற்றும் மொத்த கடமை ஏய்ப்புக்காக பதிவு செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நிறுவனம் சுமார் ₹831.72 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் கூறினர்.

Related Stories: