அனுமன் கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: பாஜ-ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சாந்தினி சவுக் பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுமன் கோயில் இடிக்கப்படுவது குறித்து பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சி பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றன. டெல்லி சாந்தினி சவுக் பகுதி  தற்போது அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக, அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில்  உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டாக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜ மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. அனுமன் கோயில் இடிக்கப்படும் விவகாரத்தில் மதக் குழு மறுஆய்வு செய்ய முடியாது என்றும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஆம் ஆத்மி எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்தது என்று பாஜ குறை கூறியுள்ளது. ஆனால், பாஜ தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் தான் அனுமன் கோயிலை இடித்தது என்று ஆம் ஆத்மி கூறுகிறது.

இதுபற்றி ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும், மாநகராட்சி பொறுப்பாளருமான துர்கேஷ் பதக் இதுபற்றி கூறுகையில், ”சாந்தினி சவுக்கில் 100 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலை இடித்ததன் மூலம் இந்த நாட்டில் மில்லியன் கணக்கான இந்துக்களின் உணர்வை பாஜக இன்று புண்படுத்தியுள்ளது. தன்னை இந்துக்களின் கட்சி என்று கூறிக்கொள்ளும் பாஜவின் உண்மையான முகம் இன்று முழு நாடு முன்னும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அனுமன் கோயிலை இடிக்கும் தனது விருப்பத்தை பாஜ ஆளும் மாநகராட்சி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெளிவாக கூறியுள்ளது. இந்த கோயிலின்தற்போதைய நிலைக்கு பாஜவே காரணம்” என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜவின் டெல்லி பிரிவு,”சாந்தினி சவுக் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாகவே இந்த அனுமன் கோயில் இடிக்கப்பட்டது. இத்திட்டத்தை அறிவித்து செயல்படுத்துவது ஆம் ஆத்மி அரசு தான்\” என தெரிவித்துள்ளது.

இதுபற்றி பாஜ செய்தி தொடர்பாளர் பிவீண் சங்கர் கபூர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதி தெரிவித்துள்ள பதிலில், அனுமன் கோயில் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்த கோயில் அதே இடத்தில் மீண்டும் கட்டபபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, சாந்தினிசவுக் புனரமைப்பு திட்டத்திற்கு உள்ளுர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். இத்திட்டத்தால் அங்குள்ள மூன்று மதங்களுக்கு சொந்தமான கட்டுமானங்கள் இடிக்கப்படுவதை சுட்டிக்காட்டின. இந்த போராட்டம் காரணமாக டெல்லி அரசின் மக கமிட்டி இரண்டு விவகாரங்களில் ஆய்வு நடத்தி கட்டிடடடம் இடிப்பதிலிருந்து விலக்கு அளித்தது.

ஆனாலும், இந்த கமிட்டி அனுமன் கோயில் இடிக்கப்படுவதை பற்றி பரிசிலீக்கவில்லை. இதனால் தற்போது இடிக்கப்பட்டுவிட்டது” என்றும் கபூர் தெரிவித்தார். எனவே, மோதி பஜார் பகுதியில் மீண்டும் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் பரிந்தரை செய்தார். இதனிடையே, அனுமன் கோயில், ஆம் ஆத்மி அரசின் அழுத்தம் காரணமாகவே இடிக்கப்பட்டது என்று என்டிஎம்சி மேயர் குற்றம்சாட்டியுள்ளார்

Related Stories: