பாஜகவில் ஒரு விவசாய தலைவராவது உண்டா?.. ராஜஸ்தான் பேரணியில் சச்சின் பைலட் பேச்சு

ஜெய்ப்பூர்: பாஜக கட்சியில் ஒரு விவசாய தலைவராவது உண்டா என்று, ராஜஸ்தானில் நடந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் கேள்வி எழுப்பினார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தானில் நடந்த பேரணியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் பேசுகையில், ‘தேசியவாதம் என்பது விவசாயிகளின் நலனை பாதுகாப்பது. நாக்பூரில் அரை பேன்ட் அணிந்த நபர்களின் (ஆர்எஸ்எஸ்) உரைகளை போன்றது அல்லது. நீங்கள் லவ்-ஜிஹாத் பற்றி பேசுகிறீர்கள்; திருமணங்கள் தொடர்பான சட்டங்களை உருவாக்கி விவசாயிகளின் எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறீர்கள்.

இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் பெரும்பாலான விவசாயிகள் வந்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு சில கட்சிகளிலும் உள்ளனர். இதற்கான வரலாற்று சாட்சியும் உள்ளது. பாஜக கட்சியில் விவசாயத் தலைவர்கள் எவரும் இல்லை. இருக்கவும் முடியாது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய போராடும் விவசாயிகள், சட்டத்திற்கு எதிராக போராடுவது மட்டுமின்றி எதிர்கால விவசாயம் குறித்து அவர்களுக்கு அச்சமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அஞ்சுகிறார்கள். வேளாண் சட்டங்களை ரத்து செய்வது என்பது, ஒரு சிக்கலான பிரச்சினை அல்ல.

மத்திய அரசு மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்று சொல்ல வேண்டும். இந்த சட்டங்களைத் திரும்பப் பெறுவதால், எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. சட்டங்களை திரும்பப் பெற்றால் நாங்கள் உங்ககளுக்கு நன்றி தெரிவிப்போம். ஆனால் ஆளும் பாஜக அரசு பிடிவாதமாக இருப்பதால், இந்த ரத்து செய்யாது என்றே நினைக்கிறேன்’ என்று பேசினார்.

Related Stories: