வாணியம்பாடியில் மேம்பாலம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு வாணியம்பாடி பகுதிகளி இருந்து சேகரிக்கும் குப்பைகளை சேகரித்து மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகிறது.அவ்வாறு சேகரிக்கப்படும் மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்களை தூய்மை பணியாளர்கள் சேகரித்து வைத்து, மொத்தமாக கிடங்கிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே சேகரித்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மளமள தீ பரவி எரியத்தொடங்கியது.இதனால், அப்பகுதி புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும், தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் மிகவும் சிரமத்குள்ளாகினர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும், யாரும் அவ்விடத்தில் வந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு சேகரித்து வைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் தீ வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: