கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அனுமதி: மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்கும்

டெல்லி: கோவிஷீல்டு, கோவாக்சின்  தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் பரிந்துரையை ஏற்று கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி பேட்டியளித்தர். 2 நிறுவனங்களின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது என கூறினார்.

இந்த மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படுகிறது. இதற்கான பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது.

Related Stories: